பலாத்காரம் செய்துவிடுவேன்... தொடர்ந்து போனில் மிரட்டி வந்த நபர்: நடிகை குஷ்பு எடுத்த அதிரடி முடிவு

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு பலாத்காரம் செய்துவிடுவேன் என்று தன்னை தொடர்ந்து ஒருவர் மிரட்டி வருவதாக கூறி கொல்கத்தா பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் நடிப்பை தொடர்ந்து, தங்களுக்கு பிடித்த ஒவ்வொரு கட்சியில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ளார். இவருக்கும் பா.ஜ.கவை சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி டுவிட்டரில் கடுமையான வாக்குவாதம் போகும்.

இந்நிலையில் இவர் கடந்த புதன் கிழமை, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனக்கு ஒரு போன் நம்பரில் இருந்து நிறைய பலாத்கார மிரட்டல் வருகிறது.

சஞ்சய் ஷர்மா என்பவரின் அந்த தொலைப்பேசி அழைப்பு கொல்கத்தாவில் இருந்து வருகிறது. எனவே கொல்கத்தா பொலிசாரிடம் நான் வேண்டுகோள் வைக்கிறேன். சீக்கிரம் அந்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து மற்றொரு டுவிட்டில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜியை டேக் செய்துள்ள குஷ்பு, எனக்கே இது போன்று நடக்கிறது என்றால், மற்ற பெண்களின் நிலையை நினைத்து பாருங்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதைக் கண்ட இணையவாசி ஒருவர் ஏன் இப்படி பொதுவாக பதிவிட வேண்டும் கேட்க, அதற்கு குஷ்பு,

எனக்கு மிரட்டல் விடுத்தநபருக்கு ஒரு குடும்பம் இருக்கும். எனவே அந்த நபர் பொதுவெளியில் அசிங்கப்பட வேண்டும் என்று பதில் அளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்