வீட்டு சமையலறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்! 2 நாட்களுக்கு முன்னரே தற்கொலை செய்துகொண்டதாக தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல தொலைக்காட்சி நடிகர் சமீர் சர்மா வீட்டு சமையலறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள வீட்டில் வசித்து வந்த 44 வயதான சமீர் சர்மா ஹிந்தி தொலைகாட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து புகழ்பெற்றவர்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு வீட்டு சமையலறையில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் சமீர் இருப்பதை இரவு காவலாளி பார்த்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சமீர் சடலத்தை மீட்டனர். அவர் இரு தினங்களுக்கு முன்னரே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீர் வீட்டில் இருந்து எந்தவொரு கடிதமும் கைப்பற்றப்படவில்லை.

சில காலமாக பெரியளவில் உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சமீர் அதிலிருந்து குணமடைந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே டோனி வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங்கின் தற்கொலை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீரின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்