மூச்சுவிட சிரமமா இருக்கு... மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்!... கதறி அழுத விஜயலட்சுமி

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

உடல்நிலை தேறாத போதும் தன்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிவிட்டதாக கூறியுள்ளார் நடிகை விஜயலட்சுமி.

தமிழில் ப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், மீசைய முறுக்கு படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி.

சில தினங்களுக்கு முன்னர் வீடியோவை வெளியிட்ட விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி பரபரப்பை கிளப்பினர்.

உடனடியாக அவரை மீட்ட நடிகை காயத்ரி ரகுராம், சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமியிடம், எழும்பூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றுக் கொண்டார்.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தன்னை வலுக்கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியதற்கான காரணம் புரியவில்லை.

மூச்சுவிட சிரமமாக இருந்த நிலையிலும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள்.

சீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு பின்னால் அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை, நான் நாடகம் எதுவும் போடவில்லை.

காயத்ரி ரகுராம் என் அனுமதியே இல்லாமல் என்னை டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளார். அன்று எனக்கு ஆதரவாக இருந்து காயத்ரி ராகுராம் தற்போது என்னுடன் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்