பிரபல திரைப்பட நடிகையான விஜயலட்சுமி நான் உயிரிழக்கப்போவதாக கூறி வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
நடிகையான விஜய லட்சுமி கடந்த சில மாதங்களாகவே சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் இறக்கப்போவதாகவும், இதற்கு முன் நான் என்னுடைய அம்மா மற்றும் சகோதரிக்காக பலவற்றையும் பொறுத்திருந்து, எதிர்த்து வந்தேன்.
ஆனால், இப்போது நடப்பவை எல்லாம் பார்க்கும் போது, என்னால் முடியவில்லை, நான் சாகப்போகிறேன், ஏற்கனவே இரண்டு பிபி மாத்திரை போட்டுவிட்டேன் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து அவர் தற்போது சென்னை அடையார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.