நடிகை வனிதாவை மிகவும் மோசமாக பேசிய பெண்ணுக்கு கொரோனா உறுதி! விசாரித்த பொலி்சாருக்கும்

Report Print Santhan in பொழுதுபோக்கு
1242Shares

பிரபல திரைப்பட நடிகை வனிதாவின் திருமண விவகாரம் குறித்து மோசமாக விமர்சித்து வந்த சூர்யா தேவி என்ற பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் பீட்டர் பால், தன்னுடைய முதல் மனைவியை விவகாரத்து செய்யாமல், வனிதாவை திருமணம் செய்து கொண்டதால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி திரைப்பிரபலங்கள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்றோர் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இதில் யூ டியூப் பிரபலம் என்று அழைக்கப்படும் சூர்யா தேவி என்ற பெண், வனிதாவை மிகவும் மோசமாக விமர்சித்து வந்தார்.

இதனால் வனிதா அவர் மீது புகார் கொடுத்ததையடுத்து, கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது சூர்யா தேவிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சூர்யா தேவியை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடிகை வனிதா முன்னரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சூர்யா தேவிக்கு கொரோனா இருப்பதாகவும், அவருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது தனக்கு கொரோனா சோதனையில் நெகடிவ்வாக வந்திருப்பதாகவும், சூர்யா தேவியை தற்போது காணவில்லை எனவும், பொலிசார் மற்றும் சுகாதார அதிகாரிகள் அவரை தேடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்