தொடர் சர்ச்சைகள்: டுவிட்டர் அக்கவுண்டை நீக்கினார் வனிதா விஜயகுமார்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
116Shares

சமூகவலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம்.

கடந்த மாதம் 27ம் திகதி வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை கரம்பிடித்தார்.

அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், தனக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்துள்ளார் எனவும் பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகாரளிக்க விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

ஹெலனுக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உட்பட பல பிரபலங்கள், பொதுமக்கள் ஆதரவளிக்க அவர்களை தாக்கி பேசினார் வனிதா விஜயகுமார்.

பல மீடியாக்களுக்கும் மாறி மாறி ஹெலனும், வனிதாவும் பேட்டியளித்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய டுவிட்டர் கணக்கை நீக்கியுள்ளார் வனிதா விஜயகுமார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்