தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்துக்கு இந்த நோய் இருந்தது! அம்பலப்படுத்திய அவரின் மருத்துவர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
579Shares

தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் பைபோலார் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய திடீர் மரணம் சினிமா ரசிகர்களை உலுக்கியது.

பாலிவுட்டில் உள்ள வாரிசு சினிமா அரசியல் தான் அதற்குக் காரணம் என பல ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள்.

சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் மும்பை பாந்த்ரா பொலிசார், அவரது நண்பர்கள், நடிகர், நடிகைகள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சுஷாந்துக்கு சிகிச்சை அளித்த 3 மனநல மருத்துவர்கள் மற்றும் சைக்கோதெரப்பிஸ்ட் ஒருவரிடமும் பொலிசார் விசாரணை நடத்தினர்.

அதில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த சுஷாந்த், அடிக்கடி மருத்துவரை மாற்றியதும், 2 மாதங்களுக்கும் மேலாக உட்கொண்டு வந்த மருந்துகளை பாதியில் நிறுத்தியதும் தெரிய வந்தது.

மேலும் அவர்களுள் ஒரு மருத்துவர் சுஷாந்துக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் நோய் இருந்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாகவே அடிக்கடி தற்கொலை எண்ணம் வரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்