நடிகர் அர்ஜுன் மகளுக்கு கொரோனா உறுதி! அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி: வேதனையில் குடும்பத்தினர்

Report Print Santhan in பொழுதுபோக்கு
6359Shares

பிரபல திரைப்பட நடிகரான அர்ஜுன் மகளான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அடுத்தடுத்து தாக்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சமீபத்தில், தான் நடிகர் அர்ஜுனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் அடைந்தார்.

இதில் இருந்தே மீள முடியாமல் நடிகர் அர்ஜுன் தவித்து வந்தார். சிரஞ்சீவி சார்ஜாவின் மரணத்தின் போது கண்ணீர் விட்டு அழுத வீடியோ காட்சிகளும் சமூகத்தளங்களில் வைரலானது.

அதுமட்டுமின்றி, சிரஞ்சீவி சார்ஜா மற்றும் அர்ஜுனின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது ஐஸ்வர்யாவுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதால், அடுத்தடுத்த அதிர்ச்சியால் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்