சட்டபூர்வமாக திருமணம் ஆகி எனக்கு 36 ஆண்டுகள்! வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கொடுத்த பதிலடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
5556Shares

வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணாவும் வீடியோ அழைப்பில் மோதி கொண்ட நிலையில் வனிதாவுக்கு லட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.

பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்த வனிதாவை சில பிரபலங்கள் விமர்சித்தனர்.

அதிலும் முக்கியமாக லட்சுமி ராமகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்தார், முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாத நபரை வனிதா எப்படி மணந்தார் என கேள்வியெழுப்பினார்.

இந்த நிலையில் வனிதா டுவிட்டரில், இது தான் கடைசி எச்சரிக்கை, என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீர்கள் என கஸ்தூரி, லட்சுமியை எச்சரித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், திருமணம்,அர்ப்பணிப்பு, தன்மை ஆகியவை பற்றி உங்களுக்கு புரிகிறதா? சட்டபூர்வமாக திருமணம் செய்து 36 ஆண்டுகளாக கணவர் டாக்டர் ராமகிருஷ்ணன் உடன் வாழ்கிறேன், அவரை பற்றி பேச எப்படி தைரியம் வந்தது?

உடைகளை மாற்றுவது போல கணவரை மாற்றுகிறவர்களுக்கு இது புரியாது, உங்களுக்கு அனுதாபங்கள்.

குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக வாழ என்ன தேவை என்று உங்களுக்குத் தெரியுமா? கணவன்-மனைவி உறவு பற்றி உங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்பித்தீர்கள்? மற்றவர்கள் உங்களைப் போன்றவர்கள் என்று நினைக்க வேண்டாம், நாங்கள், இந்த உலகில் எதற்கும் எங்கள் சுய மரியாதை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்