சொல்வதெல்லாம் உண்மையில் நீ... நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை நேரலையில் கிழித்து தொங்கவிட்ட வனிதா: முழு தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு
2022Shares

எங்கள் வீட்டி விஷயத்தில் பேசுவதற்கு நீ யார், உன்னைப் பற்றி தெரியாதா என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ண்னை, நடிகை வனிதா விளாசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில், பிரபல திரைப்பட நடிகையான வனிதா, பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதில் பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியை முறையான விவாரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டதால், இந்த திருமணம் இப்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

காவல்நிலையத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் இந்த பிரச்சனை வந்து சிக்கிக் கொண்டவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் சமீபத்தில் பீட்டர் பாலின் முதல் மனைவியுடனான வீடியோ காலில் பேசினார்.

அது பிரபல யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படி ஒரு புருஷன் உனக்கு தேவையா என்று அவரிடம் கேட்டார். அதுமட்டுமின்றி பல்வேறு கேள்விகளை கேட்டார்.

இதனால் இது குறித்து கேள்வி கேட்பதற்காக வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நேரலையில் பேசினார். அப்போது வனிதா, நீங்கள் யார் என் குடும்ப பிரச்சனைக்குள் நுழைவதற்கு, நீங்க என்ன நீதிபதியா? நீ என்ன ஒழுங்கா? ஒருத்தனோட இருப்பதனால் நீ என்ன ஒழுங்கா? உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா? சும்மா காசு கொடுக்கிறாங்கன்றதுக்காக நடிக்காதா? நீ ஒரு நடிகை என்று எனக்கு தெரியும்?

என்னம்மா நடிக்கிற, சொல்வதெல்லாம் உண்மையில் பலர் அப்பாவிகளை கெடுத்துருக்க, உன்னை எல்லாம் கிழிக்கனும்னு தான் இப்போ பேச வந்திருக்கேன், பேசு என்று வனிதா கேட்க, அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன், இது போன்ற ஆளிடம் பேச முடியாது என்று நழுவ முயன்றார்.

ஆனால் வனிதா விடாமல், பல அப்பாவிகளின் வாழ்க்கையில் விளையாடியிருக்க, இப்போ பேசு, நான் உன்கிட்ட பேசனும் என்று கூற, உடனே லட்சுமி ராமகிருஷ்ணன் நானும் பேசுவேன் என்று கூற, பேசு டி, அதுக்கு தான் வந்துருக்கேன்.

ஏதோ அப்படி, இப்படினு பேசுற, முதலில் நீ யாரு? அவர்களுக்கு சப்போர்ட் பண்ற என்றால், காவல்நிலையத்திற்கு வா? நீதிமன்றத்திற்கு வா? அதை விட்டுவிட்டு இப்படி ஏன் ஊடகங்களுக்கு வர, உன்னைப் பற்றி எல்லாம் சொன்னால் அவ்வளவு தான் என்று கூற, லட்சுமிராமகிருஷ்ணன் போனை கட் செய்துவிட்டார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்