ரஜினிகாந்த் கொரோனோவால் பாதிக்கப்பட்டதாக பரவிய தகவல்! மறுப்பு தெரிவித்த அவர் மக்கள் தொடர்பாளர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
89Shares

நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை என்று அவரது மக்கள் தொடர்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யா உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் மற்றொரு பாலிவுட் பிரபலமான அனுபம் கேர் குடும்பத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் பரவியது.

அதற்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் அவரது, மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது, அதில் உண்மையில்லை என்றும் இதுபோன்ற நேரங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்