நீங்களே பாருங்க... முதல் மனைவி சொல்ற மாதிரி பீட்டர் கிடையாது! நடிகை வனிதா வெளியிட்ட ஆதார வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான வனிதா பீட்டல் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பீட்டர் பாலின் முதல் மனைவி, எலிசபெத் ஹெலன், காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தன் கணவரை வனிதா திட்டமிட்டு திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் ஒரு குடிகாரர், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்கானவர்.

வனிதா எல்லாம் அவருக்கு பத்தோடு, பதினொராவது ஆள் தான் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து வனிதா தற்போது தன்னுடைய யூ டியூப் சேனலில் தன்னுடைய திருமணம் குறித்து விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் வீடியோ ஒன்றை ஆதாரமாக வெளியிட்டுள்ளார்

அதில், பீட்டல் பால் பற்றி பல்வேறு அவதூறுகளை மீடியாவில் பேசுகிறார்கள். மேலும் அவர் குடிகாரர் என்றும் சொல்கிறார்கள்.

அவருக்கு மது அருந்தும் பழக்கமில்லை. அவர் மாமிசம் கூட சாப்பிட மாட்டார். திருமணத்தின் போது ஓபன் பண்ண Champagne பாட்டிலை கூட அவர் குடிக்கவில்லை.

அந்த வீடியோ கூட இப்போது இருக்கிறது. அதை உங்களுக்காக வெளியிடுகிறேன் என்று அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்