திருமணம் ஆன அடுத்த நாளே வந்த பிரச்சனை! பீட்டர் பால் முதல் மனைவி புகாருக்கு நடிகை வனிதா கொடுத்த பதில்

Report Print Santhan in பொழுதுபோக்கு

திரைப்பட நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரின் மனைவி திடீரென்று புகார் கொடுத்ததால், இதற்கு வனிதா விஜயக்குமார் பதில் கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

நடிகையான வனிதா விஜயாகுமார், நேற்று பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் ஊரடங்கு அமுலில் உள்ளதால், வீட்டிலே கிறிஸ்துவ முறைப்படி இவர்களின் திருமண்ம நடைபெற்றது.

கணவர் பீட்டர் பால் சினிமாவில் விஷூவல் எபெக்ட்ஸ் இயக்குநராகப் பணியாற்றிவருகிறார்.

வனிதா ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தானவர். முதல் கணவருடன் ஒரு மகனும் இரண்டாவது கணவர் மூலம் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். மகன் மட்டும் முதல் கணவருடன் இருக்கும் நிலையில், மகள்கள் வனிதாவுடன்தான் இருக்கிறார்கள்.

இந்த திருமணத்தில், பீட்டரின் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சினிமாத்துறையில் இருந்து நடிகைகள் அம்பிகாவும், ரேகாவும் நேரில் சென்று வாழ்த்தினர்.

இந்நிலையில் இன்று காலை திடீரென்று பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், எனக்கும் பீட்டருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் முறைப்படி என்னிடம் இருந்து விவாகரத்து பெறாமல் வனிதாவைத் திருமணம் செய்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகார் 10 நாட்களுக்கு முன்பாகவே வடபழனி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இது குறித்து வனிதாவிடம் பிரபல தமிழ் ஊடகமான விகடன் கேட்ட போது, எங்கள் திருமணம் நேற்று தான் நல்லபடியாக முடிந்துள்ளது.

முதலில் இந்த திருமணத்திற்கு என்னுடைய பக்கத்தில் இருந்து ஏதாவது பிரச்சனை வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

சிலர் இந்த விஷயத்தை பார்த்துவிட்டு, வனிதா ஏமாந்துவிட்டார் என்று கூறி வருகின்றனர். ஆனால் நான் ஏமறவில்லை, பீட்டரைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்,

பீட்டரும் அவரது முதல் மனைவியும் 8 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டார்கள்.

இருவரும் தனித்தனியாகத்தான் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தது.

இந்தப் பிரச்னையை முழுக்க முழுக்க எங்களுடைய வழக்கறிஞர்களிடம் கொடுத்துவிட்டோம். இனி அவர்கள் இதை பார்த்து கொள்வார்கள்.

ஒரு கோடி ரூபார் அவர் கேட்கபதாக சொல்கிறார்கள். அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவது, இந்தப் புகாரால் எங்கள் திருமண வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இல்ல. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். இதைச் சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்