எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது! வறுமை காரணமாக கருவாடு விற்கும் பிரபல நடிகர் உருக்கம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

கொரோனா லாக்டவுனால் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நடிகர் வருமானத்துக்காக கருவாடு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

உலகையே மிரட்டி கொண்டிருக்கும் கொரோனாவுக்கு பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

சினிமா தொழிலையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சினிமா மற்றும் சின்னத்திரை தொழிலாளர்கள் மற்றும் துணை, நடிகர், நடிகைகள் கடும் பொருளாதார சிக்கலில் உள்ளனர்.

இந்த நிலையில் லாக்டவுனால் வேலை இழந்த்கருவாடு விற்பனை செய்து வருகிறார். அவர் பிரபல மராத்தி நடிகர் ரோஹன் பட்னேகர். பாபாசாகேப் அம்பேத்கர் என்ற டிவி தொடரில் நடித்ததன் மூலம் மராத்தி மக்களிடையே பிரபலமடைந்தவர் இவர். குடும்பத்தில் இவர் மட்டுமே சம்பாதித்து வருவதால், வேறு வழியில்லாமல் கருவாடு வியாபாரம் செய்து வருகிறார்.

அவர் கூறும்போது, லாக்டவுனுக்கு முன்பு வரை எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. 3 மாதத்துக்கு பிறகு 35 பேரை வைத்து மட்டுமே படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்தனர். அதில் எனக்கு இடம் கிடைக்குமா என்பது என்னை அலைகழித்தது.

பிரபலமானவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், நண்பர்களுடன் ஆலோசித்தேன். பிறகு கருவாடு வியாபாரம் செய்ய தொடங்கினேன்.

எனது தந்தை இதை செய்திருக்கிறார் என்பதால் எனக்கு கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. அதனால் இதை விற்க ஏன் தயங்க வேண்டும் என்று யோசித்தேன். பிறகு விற்கத் தொடங்கினேன். நடிகராக இருந்துகொண்டு கருவாடு விற்பதில் எந்த வெட்கமும் இல்லை.

சிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்வது பற்றி அவர் கூறும்போது, நானும் மன உளைச்சலில் இருந்தேன். தற்கொலை எண்ணமும் வந்தது. ஆனால், அதில் இருந்து என்னை மீட்டு கொண்டேன். போராடுவோம் என்று உறுதிகொண்டேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்