என் அண்ணனுக்கும் இப்படி தான் நடந்தது... அப்பாவிகள கொன்னுட்டாங்களே! கதறி அழுத பிரபல சீரியல் நடிகை

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழகத்தில் பொலிசாரால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று திரைப்பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகையான ஜனனி அசோக் ஜெயக்குமார் இதே போன்ற நிலை தான் என்னுடைய அண்ணனுக்கும் நடந்தது என்று கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் பொலிசார் விசாரணையில் மரணம் அடைந்தனர்.

அவர்கள் கொடூரமாக பொலிசாரால், தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக பொலிசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இது போதாது, இது ஒரு காட்டுமிராண்டித் தனமான செயல், இப்படி மிகவும் மோசமாகவா நடந்து கொள்வது, அவர்களுக்கு இதை எல்லாம் தாண்டி சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

தமிழகத்தை தாண்டி இந்த விவகாரம் இப்போது இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

அந்த வகையில், பிரபல சீரியல் நடிகையான ஜனனி அசோக் ஜெயக்குமார் இந்த சம்பவம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ, இதே போன்ற நிலை தான் என்னுடைய அண்ணனுக்கும் நடந்தது என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

#justiceforjayarajandfenix

A post shared by Janani Ashok Kumar (@janani_ashokkumar) on

அதில், மிருகங்கள் தான் இது போன்று நடந்து கொள்ளும், அதுங்க கூட பசித்தால் மற்ற விலங்குகளை வேட்டையாடும், ஆனால் இங்கோ.

நான் தொலைக்காட்சி அதிகம் பார்ப்பதில்லை, சமூகவலைத்தளங்கள் பக்கமும் கொஞ்ச நாள் வரவில்லை. இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தை லாக் இன் செய்கிறேன் இந்த மோசமான சம்பவம் வருகிறது.

அமெரிக்காவில் ஒரு கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்கு அந்த பொலிசார் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதுவும் சரியான தண்டனை கிடையாது, ஆனா இங்கு அது கூட இல்லையே, என்ன நடக்கிறது.

நான் ஏன் இதைப் பார்த்தவுடன் இப்படி அழுகிறேன் என்றால், என்னுடைய வாழ்க்கையில் இதே போன்ற சம்பவம் நடந்தது. என் அண்ணனின் உடலை வாங்குவதற்கு பொலிசார் பணம் கேட்டனர்.

அப்போது நான் சின்னப் பிள்ளை, எப்போது இதற்கெல்லாம் நியாயம் கிடைக்கப் போகிறது என்று தொடர்ந்து கதறி அழுகிறார்.

இந்த வீடியோவைக் கண்ட அவரது ரசிகர்கள் அனைவரும் தயவு செய்து இப்படி அழாதீர்கள், கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்