மகள்கள் முன்னிலையில் வனிதாவுக்கு 3வது திருமணம்: கொண்டாட்டமான வீடியோ காட்சிகள்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

பிரபல நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்தது.

நடிகர் விஜய் உடன் சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை வனிதா. 1995-ம் ஆண்டு இந்த படம் வெளியானது.

அதன்பின் வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் திரையுலகிலிருந்து விலகினார்.

தொடர்ந்து 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவகாரத்து செய்தார்.

பின் 2007-ம் ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டார். அதுவும் 2010-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

நடிகை வனிதாவிற்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் விஜய் ஸ்ரீஹரி அவரது அப்பா உடன் உள்ளார். தற்போது நடிகை வனிதா தனது 2 மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார், தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களில் நடித்து வந்தார்.

தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி தன்னுடைய சமையல் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் இன்று அவரது வீட்டிலேயே திருமணம் நடந்து முடிந்தது.

பீட்டர் பற்றி ஏற்கனவே கூறியுள்ள வனிதா, அவர் ஒரு தொழில்முறை இயக்குனர். என் இதயத்தை திருடி காதலில் விழ வைத்த அன்பான, அருமையான ஒரு மனிதர்.

மிக விரைவில் அவரது படைப்புகளை திரையில் நீங்கள் காண்பீர்கள், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு ஏற்ற சரியான ஆணை தேர்ந்தெடுப்பது குறித்து ஒரு கனவு இருக்கும்.

என்னுடைய கனவு நனவாகியிருக்கிறது என புகழ்ந்த வனிதா தன்னுடைய குழந்தைகளிடம் கூறி சம்மதம் வாங்கி உள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்