42 வயதில் முதல் முறையாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை சங்கவி!

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான சங்கவி முதல் முறையாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில், 90-ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத நடிகைகளில் சங்கவியும் ஒருவர், நடிகர் அஜித்தின் அமராவதி படத்தில் நடிகையாக அறிமுகமான இவர், அதன் பின் விஜய், கார்த்திக் என பல நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு மென்பொறியாளர் வெங்கடேஷ் என்பவரை சங்கவி திருமணம் செய்து கொண்டார்.

42 வயதாகும் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிடாமல் இருந்து வந்தார்.

இதையடுத்து 6 தினங்களுக்கு முன்பு, அன்னையர் தினத்தையொட்டி குழந்தையுடன், தான் இருக்கும் புகைப்படத்தை சங்கவி வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்