வெளிநாட்டில் உள்ள நடிகர் விசுவின் மகள்கள்! தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத இக்கட்டான நிலை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகர் மற்றும் இயக்குனர் விசு உயிரிழந்த நிலையில் அவரின் மகள்கள் வெளிநாட்டில் உள்ளதால் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனரும், நடிகருமாக இருந்தவர் விசு. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோசமடைந்ததால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று மாலை விசு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

விசு உடல் துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

மறைந்த விசுவுக்கு உமா என்ற மனைவியும் லாவண்யா, சங்கீதா, கல்பனா என்ற 3 மகள்களும் உள்ளனர். 2 மகள்கள் அமெரிக்காவில் உள்ளனர். இன்று மாலை (திங்கட்கிழமை) இறுதி சடங்கு நடக்கிறது.

இந்த சூழலில் கொரோனா பரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் சேவை 31ஆம் திகதி வரை இந்தியா முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் விமானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

இதனால் அமெரிக்காவில் இருக்கும் விசுவின் மகள்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...