இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரித்தானிய நடிகைக்கு கொரோனா

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

உலகப் புகழ்பெற்ற 'Game of Thrones' தொடரில் எல்லாரியா சாண்ட் வேடத்தில் நடித்த இந்திரா வர்மாவிற்கு கொரோனா தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய தந்தைக்கும் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த சுவிஸ் தாய்க்கும் பிரித்தானியாவில் பிறந்தவர் இந்திரா வர்மா (46).

இவர் உலகப் புகழ்பெற்ற 'Game of Thrones' தொடரில் எல்லாரியா சாண்ட் வேடத்தில் நடித்து பிரபலமடைந்திருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு COVID-19 வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Game of Thrones-ல் நடித்த மற்றொரு பிரபல நடிகர் கிறிஸ்டோபர் ஹிவ்ஜுவிற்கு வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து இந்திரா வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கோவிட்-19 வைரஸால் உலகெங்கிலும் பலரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

நாங்கள் விரைவில் குணமடைவோம் என்று நம்புகிறோம், சிகிச்சையில் இருக்கும் எங்களுக்கு ஆதரவளிக்க உங்கள் அனைவரையும் (மற்றும் அரசு) கேட்டுக்கொள்கிறோம் என் பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...