நீண்ட நாள் ஆசை நிறைவேறாத கலக்கத்தில் தூக்கில் தொங்கிய சின்னத்திரை நடிகை!

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பெங்காலி சின்னத்திரையில் நடித்து வந்த நடிகை சுபர்ணா, ஞாயியற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெங்காலி சின்னத்திரையில் சிறிய கதாபாத்திரங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர் சுபர்ணா ஜாஸ் (23). பர்த்வானைச் சேர்ந்த சுபர்ணா தனது படிப்பைத் தொடர கொல்கத்தாவிற்கு வருகை தந்தார்.

அங்கு நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் பல ஆடிஷன்களில் கலந்துகொள்ளதுவங்கியுள்ளார்.

ஆனால் அவர் எதிர்ப்பார்த்ததை போன்று நடிகை போன்ற பெரிய கதாபாத்திரங்கள் கிடைக்காததால், பெரும் மனஅழுத்தத்திலும், வேதனையிலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மீண்டும் தனது சொந்த வீட்டிற்கு திரும்பிய அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தார், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

திங்கட்கிழமையன்று அவருடைய கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்