திருமணம் ஆகாமலே குழந்தை பெற்ற பிரபல நடிகை! யார் அந்த காதலன்? வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான கல்கி கோச்சலின் திருமணம் செய்யாமல் காதலனுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

பாண்டிச்சேரியில் பிறந்த வளர்ந்த பிரான்ஸ் பெண் கல்கி கோச்சலின், ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்துள்ள இவர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பண்முகம் கொண்ட அனுராக் காஷ்யப்பை காதலித்து கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் தம்பதிகளுக்கிடையே கருத்து வேறு ஏற்பட்டதால், கடந்த 2015-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின் ஹிந்தியில் தேவ் டி, சைத்தான், த்ரிஷ்னா, ஷாங்காய், ஹேப்பி என்டிங், கல்லி பாய் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர், தமிழ் படங்களில் அதிகம் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். இருப்பினும் அவருக்கு அந்தளவிற்கு வாய்ப்பு வரவில்லை.

இதற்கிடையில், விவாகரத்துக்கு பின் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இதன் காரணமாக கல்கி கர்ப்பமானார். இது குறித்த புகைப்படங்களை கல்கி அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

தற்போது இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர் தாய்மை அடைந்திருப்பதை பற்றி உருக்கமாக பேசி வந்த நிலையில், கய் ஹெர்ஸ்பர்க் மற்றும் கல்கி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்