என்னை கொல்ல பார்க்கிறார்கள் என நடிகை ஜெயஸ்ரீ முன்னரே கூறினார்! உயிருக்கு போராடும் நிலையில் தோழி தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
607Shares

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ உயிருக்கு போராடி வரும் நிலையில் அவர் குறித்து நடிகை ரேஷ்மா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும் நடிகருமான ஈஸ்வர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், அவருக்கு மகாலட்சுமியுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார் அளித்தார்.

இதையடுத்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் ஜெயஸ்ரீ குடும்ப பிரச்சனை மற்றும் மன அழுத்தம் காரணமாக நேற்று தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை முயற்சிக்கு முன்னர் தனது தோழியான நடிகை ரேஷ்மாவுக்கு ஜெயஸ்ரீ ஓடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், நான் இப்போ ரொம்ப மனஅழுத்ததில் இருக்கிறேன். எனக்கு வாழ தகுதியில்ல, இந்த வாய்ஸ் மெசேஜ், இவ்வளோ நாள் நீ என்னை பார்த்துக்கிட்டதுக்கு உனக்கு நன்றி சொல்ல தான் என கூறியிருந்தார்.

இது குறித்து ரேஷ்மா கூறுகையில், ஜெயஸ்ரீ அடிக்கடி என்னை கொலை செய்யப்பார்க்கிறார்கள். எனக்கு மனநிலை சரி இல்லை என்று கூறிவந்தார்.

தற்போது ஜெயஸ்ரீ உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்