சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி! உயிருக்கு போராட்டம்... பக்கம் பக்கமாக எழுதியிருந்த கடிதம் சிக்கியது

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள தன்னை கணவர் ஈஸ்வர் துன்புறுத்துவதாக ஜெயஸ்ரீ பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் ஈஸ்வரை கைது செய்த நிலையில் பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார்.

இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை முயற்சிக்கு முன்னர் பக்கம் பக்கமாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அதில் நான் வாழ்கையில் தோற்றுவிட்டேன், ஈஸ்வரும் அவர் பெற்றோரும் தான் என்னை இந்த நிலைக்கு தள்ளிவிட்டனர் என எழுதியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்