பிரபல திரைப்பட நடிகை காலமானார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகை கீதா சித்தார்த் மும்பையில் காலமானார்.

கடந்த 1973ஆம் ஆண்டு வெளியான கர்ம் ஹவா என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான கீதா பல திரைப்படங்களில் நடித்தார்.

இவரின் தனித்துவமான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் புகழை பெற்று கொடுத்தது. Parichay, Gaman போன்ற திரைப்படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது.

கீதாவின் கணவர் பிரபல தயாரிப்பாளரும், வர்ணணையாளருமான சித்தார்த் ஆவார்.

இந்த தம்பதிக்கு அந்தரா என்ற மகள் உள்ளார், அவர் பிரபலமான ஆவணப்பட இயக்குனராக உள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமை மாலையில் கீதா மும்பையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்