மனைவிக்கு பிரபல நடிகர் கொடுத்த வித்தியாசமான பரிசு... அதிகம் கவனத்தை ஈர்த்த புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் தன்னுடைய மனைவிக்கு வெங்காயத்தால் செய்யப்பட்ட இரண்டு காதணிகளை பரிசாக கொடுத்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்திருக்கும் அக்‌ஷய்குமார், தன்னுடைய மனைவி ட்விங்கிள் கண்ணாவுக்கு அரிய பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

இது குறித்து ட்விங்கிள் கண்ணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் கணவர், கபில் சர்மாவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, இந்த காதணிகளை கண்டுள்ளார்.

மிகவும் அழகாக இருப்பதாக கூறி, அதை வாங்கி வந்துள்ளார். சில நேரங்களில் இது மிகச்சிறிய விஷயங்கள்தான். ஆனால் உங்கள் இதயத்தைத் தொடக்கூடிய வேடிக்கையான விஷயங்ள் என்று குறிப்பிட்டுள்ள அவர், #onionearrings #bestpresentaward என்ற ஹேஷ் டேக்குகளை பயன்படுத்தி உள்ளார்.

முன்பாக அக்‌ஷய் குமாரும் கரீனா கபூரும் விரைவில் வெளிவர உள்ள Good Newwz திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கபில் ஷர்மா நடித்துள்ளார். இந்நிகழ்ச்சியின் போதுதான் கரீனாவுக்கு ஒரு ஜோடி வெங்காய காதணிகளை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...