கமல் மீது சாணி அடித்தேன்!.. நேரில் சந்தித்து விளக்கமளித்த நடிகர் லாரன்ஸ்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

கமல்ஹாசன் போஸ்டரில் சாணி அடித்ததாக ராகவா லாரன்ஸ் பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பில் கமல்ஹாசனையே நேரில் சந்தித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவரின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இளம் வயதில், ரஜினியின் போட்டி நடிகரான கமல் போஸ்டர் மீது சாணி அடித்துள்ளேன் என பேசினார்.

லாரன்ஸின் இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்க கமல்ஹாசனையே நேரில் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல்ஹாசன் குறித்து நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று கமல்ஹாசனை நேரில் சந்தித்து விளக்கமளித்தேன்.

எனது விளக்கத்தை ஏற்று கொண்ட அவர் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார்.

அவருக்கு என் நன்றியையும், அன்பையும் தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்