பிரபல திரைப்பட நடிகர் சென்னையில் காலமானார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகர் கோலபுடி மாருதி ராவ் தனது 80வது வயதில் சென்னையில் காலமானார்.

தெலுங்கு திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளவர் கோலபுடி மாருதி ராவ். இவர் ஹேராம், தோனி, ஆளவந்தான் போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மொத்தமாக மாருதி 250-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியராகவும் இருந்த மாருதி பல புத்தகங்கள் மற்றும் நாவல்களையும் எழுதியுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக மாருதி சென்னை தி.நகரில் உள்ள லைப் லைன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உள்ளூர் நேரப்படி இன்று பகல் 12 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

மாருதியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...