பிரபல தமிழ்த்திரைப்பட நடிகரின் சகோதரி 26 வயதில் மார்பக புற்றுநோயால் மரணம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பேட்ட திரைப்படத்தில் நடித்த நவாசுதின் சித்திக்கின் சகோதரி தனது 26 வயதில் மார்பக புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதின் சித்திக்.

இவர் இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார்.

நவாசுதினின் சகோதரி ஷயாமா தம்சி (26). இவருக்கு 18 வயதிலேயே மார்பக புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது ஷயாமா நேற்று உயிரிழந்ததாக அவரின் மற்றொரு சகோதரர் அயாசுதின் சித்திக் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், அமெரிக்காவில் ஷயாமா உயிரிழக்கும் போது அவருடன் நவாசுதினும் உடனிருந்தார்.

ஷயாமாவின் இறுதிச்சடங்குகள் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த உத்தரபிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடைபெறும் என கூறியுள்ளார்.

இதனிடையில் நவாசுதின் சகோதரி மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்