வக்கிரவாதிகளுக்கு இது ஒரு பாடம்! பிரியாங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்டவர்கள் குறித்து நடிகர் விவேக்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
275Shares

பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைதான நால்வரும் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் அதற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைதான நால்வரும் இன்று அதிகாலை பொலிசாரால் என் கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

பொலிசாரின் இந்த அதிரடி செயலை திரையுலகினர் வரவேற்றுள்ளனர்.

நடிகர் விவேக்கின் டுவிட்டர் பதிவில், நீதி கிடைத்தது! பிரியங்காவின் ஆன்மாவுக்கு அமைதி.

வக்கிரவாதிகளுக்கு இது ஒரு பாடம், இந்த நடவடிக்கையை எடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

மாணவர்களுக்கு பள்ளியில் தாய்மையின், சகோதரிகளின் மதிப்பு மற்றும் மனிதநேயம் குறித்து சொல்லித்தர வேண்டும்.

மேலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை எப்போதும் அருகில் இருந்து கண்காணிக்க வேண்டும், இதெல்லாம் செய்தால் நல்ல குடிமகன்கள் உருவாகுவார்களே தவிர குற்றவாளிகள் உருவாக மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரசன்னாவின் பதிவில், ஹைதராபாத் பொலிசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவின் பதிவில், பயம் தான் இது போன்ற பிரச்னைக்கு சிறந்த தீர்வு மற்றும் ஒரே தீர்வு என பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஷாலின் பதிவில், இறுதியாக நீதி கிடைத்தது, தெலுங்கானா பொலிசாருக்கு என் நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்