ஈழப்பெண் மர்மமான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக புகாரளித்த பிரபல இயக்குனர்! நீதிமன்றத்தின் உத்தரவு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

கடல்குதிரை திரைப்படத்தில் நடித்த ஈழப்பெண் தொடர்பாக பிரபல இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காற்றுக்கு என்ன வேலி, ரசிகர்மன்றம், உச்சிதனை முகர்ந்தால் உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் புகழேந்தி தங்கராஜ்.

இவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், கடல்குதிரை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டேன். இந்த திரைப்படம், தமிழ் ஈழத்தின் பெண்ணின் வாழ்க்கை தொடர்பானது என்பதால் இலங்கையை சேர்ந்த பிரசாந்தி என்ற 20 வயது பெண்ணை என் படத்தில் நடிக்க வைத்தேன்.

இந்நிலையில் பிரசாந்தி மற்றும் அவரது பெற்றோரை காணவில்லை.

இதுகுறித்து விசாரித்தபோது, பல மாதங்களாக பிரசாந்தியையும், அவரது பெற்றோரையும் சட்டவிரோதமாக கியூ பிரிவு பொலிசார் பிடித்து, மர்மமான இடத்தில் அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிரசாந்தியையும், அவரது பெற்றோரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கியூ பிரிவு பொலிசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது பேசிய நீதிபதி, பிரசாந்தியை தேடி வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்