31 வயதான பிரபல நடிகைக்கு கடுமையான மாரடைப்பு! மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிப்பு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகை கிஹேனா வசிஸ்த்துக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தமிழில் வெளியான பேய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தில் நடித்துள்ள கிஹேனா (31) பல்வேறு தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதோடு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கிஹேனாவுக்கு திடீரென இன்று கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் அவர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், சரியான உணவுகளை சாப்பிடாமல் தொடர்ந்து கிஹேனா 48 மணி நேரமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

அவரின் உடல் நிலையில் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை.

மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதோடு கிஹேனாவுக்கு நீரிழிவு நோய் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகளுக்காக காத்துள்ளோம் என கூறியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்