தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகர் ஸ்ரீனிவாசனுக்கு விமான நிலையத்தில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தமிழில் புள்ளக்குட்டிகாரன், சிறைச்சாலை, லேசா லேசா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளதுடன் பல படங்களுக்கு கதை ஆசிரியராகவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தேசிய விருது மற்றும் மாநில விருதுகளும் பெற்று இருக்கிறார்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து சென்னைக்கு வருவதற்காக கொச்சி விமான நிலையம் வந்த ஸ்ரீனிவாசனுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால் பயணத்தை ரத்து செய்த அவரை அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் ஸ்ரீனிவாசனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்