என் வாழ்க்கையில் நான் எதற்கும் தயங்கியதில்லை... நடிகை கவுதமி இப்படி கூற காரணம் என்ன?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

என் வாழ்க்கையில் நான் எதற்கும் தயங்கியதில்லை என நடிகை கவுதமி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ள கவுதமி நடிகர் கமல்ஹாசனுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்தார்.

13 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசனை கவுதமி பிரிந்தார்.

நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு கொண்ட நடிகை கவுதமி பா.ஜ.க கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்கள் கட்சி அலுவலகத்தில் வினியோகிக்கப்பட்டது.

இந்த மனுக்களை கவுதமி தான் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் தான் பாஜக வேட்புமனுவை பெறுகிறது.

எந்தவொரு பொறுப்புக்கும் மற்றும் வாழ்க்கையில் எதற்கும் நான் தயங்கியதில்லை என கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பாக அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்