உதயநிதி ஸ்டாலின் இரவு முழுவதும் உடன் இருந்ததாக கூறி பரபரப்பை கிளப்பிய நடிகை.. அது குறித்து மீண்டும் விளக்கம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சொகுசு ஹொட்டலில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடன் இரவு முழுவதும் தனிமையில் இருந்தார் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்த நிலையில் தற்போது பல்டியடித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் ஸ்ரீ ரெட்டி பிரபல தமிழ் நடிகர்களான ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், விஷால் உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து நேற்று அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், உதயநிதி சார் கிரீன் பார்க் ஹொட்டல் நியாபகம் இருக்கா? கதிர்வேலன் காதல் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த போது விஷால் ரெட்டி மூலமாக உங்களை சந்தித்தேன்.

அதன் பிறகு அன்றிரவு முழுவதும் என்னுடன் உறவில் இருந்தீர்கள், எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறினீர்கள். இதுவரை அப்படி எதுவும் கொடுக்கவில்லை. நீங்கள் செய்ததை என்னால் மறக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு சமூகவலைதளத்தில் விவாத பொருளாக மாறியது.

இந்நிலையில் தற்போது தான் அப்படி கூறவில்லை என ஸ்ரீரெட்டி பல்டியடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றி தவறுதலாக பதிவு போடப்பட்டுள்ளது.

அது எனது கணக்கு இல்லை போலியான கணக்கு, இது உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சியாகும். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன்.

மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

ஆனால் ஸ்ரீரெட்டியின் அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கில் தான் உதயநிதி குறித்த பதிவு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்