சாலை விபத்தில் பிரபல பாடகி மரணம்!... உயிருக்கு போராடும் கணவர்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

ஏராளமான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ள பிரபல மராத்தி பாடகி கீதா மாலி சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மராத்தி பாடகி கீதா மாலி. ஏராளமான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ள இவர், தனிப்பட்ட பாடல் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்கா சென்றிருந்த இவர், நேற்று காலை மும்பை திரும்பியுள்ளார். அங்கிருந்து நாசிக் நகரில் உள்ள சொந்த ஊருக்குக் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அவர் கணவர் விஜய்யும் உடனிருந்துள்ளார். தானே மாவட்டத்தில் உள்ள சாஹப்பூர் அருகே, நேற்று அதிகாலை 3 மணியளவில் கார் வந்துகொண்டிருந்தபோது ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லொறி மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.

இதில் கீதாவும் அவர் கணவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை சாஹ்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கீதா மரணமடைந்துள்ளார். அவர் கணவர் விஜய்-க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்