பிச்சை எடுத்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்! புகழ் வந்தவுடன் இப்படியா செய்வது? கடும் விமர்சனத்தை கிளப்பிய வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த போது பாடிய பாடலால் பிரபலமான பெண்ணுக்கு வசதி மற்றும் பணம் வந்த பின்னர் செல்பி எடுக்க வந்த ரசிகையிடம் அவர் மோசமாக நடந்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியாவின் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள இரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் சில மாதங்களுக்கு முன்னர் பாடினார்.

அவரின் பாடலைக் கேட்டதும் மெய் சிலிர்த்துப்போன ஒருவர், அதனை வீடியோ எடுத்து பேஸ்புக் பக்கத்தில் வெளியிட அது வைரலானது.

இதையடுத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரனு மண்டலுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை வழங்கியது.

அந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்த இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பினை வழங்கினார்.

தற்போது பணமும், புகழும் ரனுவுக்கு கிடைத்து வரும் நிலையில் ரசிகர்களிடையே அவர் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் ரனு தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி அவர் குறித்து கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

அதில், பல்பொருள் அங்காடிக்கு ரனு சென்றிருந்த போது அங்கு அவரை பார்த்த பெண் ரசிகை ஒருவர், தனது கையால் ரனுவின் கையை தொட்டு, உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என கூறுகிறார்.

ஆனால் திடீரென கோபமான ரனு, நான் பிரபலமான பெண், என்னை தொடாதீர்கள் என கூறுவது போல வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரனுவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதாவது, பணமும், புகழும் வந்தால் எல்லாம் மாறிவிடும், ரனு முன்னர் எந்த நிலையில் இருந்தார் என்பதை அவர் உணர வேண்டும், அவருடன் செல்பி எடுக்க விரும்பிய பெண்ணிடம் இவ்வளவு திமிருடன் நடந்து கொள்வது சரியல்ல என தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்