உபர் கால் டாக்ஸியில் சென்ற பிரபல தமிழ் நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்... புகைப்படத்துடன் வெளியிட்டார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

உபர் கால் டாக்சியில் பயணித்த பிரபல நடிகை ரித்விகா, அந்த பயணம் பாதுகாப்பற்றதாக இருந்ததாக கூறியதோடு குறித்த டாக்சி ஓட்டுனரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தமிழில் பரதேசி, மெட்ராஸ், அஞ்சல, கபாலி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள ரித்விகா கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் இரண்டாவது சீசினில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் டுவிட்டரில் ரித்விகா வெளியிட்டுள்ள பதிவில், உபர் கால்டாக்சியில் என்னுடைய பயணம் பாதுகாப்பற்றதாக இருந்தது, அந்த கால்டாக்ஸியை ஓட்டி வந்த ஓட்டுனர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அந்த கார் மிக மோசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை உபர் நிறுவனத்துக்கு டேக் செய்த ரித்விகா அதனுடன் ஓட்டுனரின் பெயர் மற்றும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ரித்விகாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவளித்து கமெண்ட் செய்து வரும் நிலையில் உபர் நிறுவனம் இது குறித்து டுவிட்டரில் விளக்கமளிக்கவில்லை.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்