பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆதங்கம்... அவர்களுக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? வெளியிட்ட புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிரதமர் நரேந்திர மோடியுடன் திரைப்பிரபலங்கள் எப்படி புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இதில் பாலிவுட் திரைப்பிரபலங்கள், ஷாரூன்கான், அமீர்கான் மற்றும் நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அப்போது இந்திய பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக, பிரதமர் மோடி அழைப்பு விடுத்த இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே அதிக அளவில் கலந்து கொண்டதாகவும், தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் எனவும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், நான் ராமோஜி ராவ்க்கு நன்றியுள்ளவன். ஏனெனில், அக்டோபர் 29-ஆம் திகதி பிரதமர் மோடி நடத்திய விருந்தில் அவரால் நான் கலந்து கொண்டேன்.

நுழைவாயிலில் உள்ளே சென்ற போது எங்களது செல்போன்களை பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டோம்.

அதற்காக டோக்கன் கொடுத்தார்கள். ஆனால், அதே நாளில் நிறைய பிரபலங்கள் பிரதமருடன் செல்பி எடுத்துக் கொண்டது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அவர்கள் எடுத்த செல்பி புகைப்படங்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்