பிரபல தமிழ்ப்பட இயக்குனர் பாரதிராஜா வீட்டில் பெரியளவில் நடந்த திருட்டு! சிசிடிவில் சிக்க போவது என்ன?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜா வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனரான பாரதிராஜா சென்னை தி நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தன் வீட்டிலிருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோன், பூஜை அறையில் இருந்த ஒரு கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதை பாரதிராஜா உணர்ந்தார்.

பின்னர் இது குறித்து அவர் மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதோடு, பாரதிராஜா வீட்டில் உள்ள வேலையாட்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விரைவில் இந்த திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்