நடிகை குஷ்புவின் மகள் தோற்றத்தை மோசமாக கிண்டலடித்த நபர்! அவர் கொடுத்த பதிலடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகை குஷ்புவின் மகள் உடல் தோற்றத்தை கிண்டலடித்த நபருக்கு அவர் சமூகவலைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்த பின்னர் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார்.

ஆனாலும் அரசியல், திரைப்படங்கள் தயாரிப்பது, டிவி சீரியலில் நடிப்பது என்று தன்னை பரபரப்பாகவே வைத்துக்கொண்டிருக்கிறார்.

சுந்தர் சி - குஷ்பு தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் மகள்களுடன் தீபாவளி கொண்டாடிய குஷ்பு அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதைப் பார்த்த யாரோ ஒருவர் குஷ்புவின் மகள் தோற்றத்தை கிண்டலடித்து பதிவிட்டார்.

இதனால் கோபமடைந்த குஷ்பு, பன்னி முதலில் உன் முகத்தை கண்ணாடியில் பாரு, நாய் கூட பார்க்காது, வாந்தி எடுத்துட்டு போய்டும் என தடாலடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்