தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபல பாடகிக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்ட முத்தம்... வைரல் வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இசை நிகழ்ச்சியின் போது பிரபல பாடகிக்கு போட்டியாளர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததால் அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் இந்தியன் ஐடோல் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் பிரபல பாடகி நேஹா காக்கர் உள்ளிட்ட மூன்று பாடகர்கள் நடுவர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதில் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் பாடி முடித்ததும் பாடகி நேஹாவை மேடைக்கு அழைக்க அவரும் வந்து சில பரிசுகளை கொடுத்தார்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் பாடகிக்கு அந்த போட்டியாளர் திடீரென கன்னத்தில் முத்தம் கொடுக்க அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த வீடியோ காட்சி சமூகலைதளத்தில் வைரலாகியுள்ளது.

வீடியோவை காண

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்