ஆபாச வீடியோ எடுத்து மயக்க மருத்து கொடுத்து சீரழித்தார்.. கண்ணீர் விட்ட தமிழ் நடிகை... வசமாக சிக்கிய நடிகர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
1503Shares

சென்னையில் மயக்க மருந்து கொடுத்து தன்னை நடிகர் சீரழித்து ஆபாசமாக படம் எடுத்தார் என துணை நடிகை அளித்த புகாரின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வடபழனி ஆற்காடு சாலையை சேர்ந்தவர் ஜெனிபர் (24).

சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஜெனிபர் சில தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், பக்ருதின் என்ற நடிகர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறினார்.

மேலும் தன்னை ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டும், எனது தாயாரை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

அதற்கு துணை நடிகர் பக்ருதின், ஜெனிபர் என்னிடமும், எனது நண்பர்களிடமும் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார்.

அந்த பணத்தை திருப்பிக்கேட்டதற்கு தன் மீது பொய் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் தனித்தனியாக காவல் நிலையங்களில் புகார் செய்து இருந்தனர்.

இதுகுறித்து பொலிசார் விசாரித்ததில் பக்ருதீன், ஜெனிபரை ஆபாச படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியது உறுதியானது.

இதையடுத்து நடிகர் பக்ருதீன் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்