திரைப்படத்துறையின் உயரிய விருதுக்கு நடிகர் அமிதாப்பச்சன் தெரிவு

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
117Shares

திரைப்படத்துறையின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப்பச்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திரைப்பட துறையில் சிறந்து விளங்குவோருக்கு 1969 ஆம் ஆண்டு முதல் ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டு வருகிறது. சத்யஜித் ரே, ராஜ் கபூர் உள்ளிட்ட பல ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர்(2010), சிவாஜி கணேசன்(1996) இந்த விருதினை பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டிற்கான விருதுக்கு அமிதாப்பச்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தன்னுடைய டுவிட்டரில், “திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்படுகிறது.

2 தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்த அமிதாப் பச்சனுக்கு விருது வழங்குவதால் ஒட்டுமொத்த நாடும், சர்வதேச சமூகமும் மகிழ்கிறது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்