கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.. தயவுசெய்து இதை செய்யாதீர்கள்! நடிகர் சூர்யா

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பதாகை விழுந்து விபத்தில் சிக்கி சுபஸ்ரீ என்ற பெண் பலியான நிலையில், நடிகர் சூர்யா தனக்கு பதாகைகள் வைக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் சுபஸ்ரீ(23) என்ற இளம்பெண், சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பதாகை காற்றில் சரிந்து தன் மேல் விழுந்ததில், நிலைதடுமாறி சாய்ந்தபோது பின்னால் வந்த லொறி அவர் மீது ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் சூர்யா தனக்கு எந்த ஊரிலும் பதாகைகள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பலமுறை இதை நான் கூறியிருக்கிறேன். இப்போது இப்படி ஒரு சம்பவம் நடந்த பின்னரும் அதை நாம் செய்ய வேண்டாம். ரசிகர்கள் எந்த ஊரிலும் எனக்கு தயவுசெய்து பதாகைகள் வைக்கக் கூடாது.

பதாகைகள் வைப்பதற்கு ஆகும் செலவை, கல்வி உதவிக்காக பள்ளிகளுக்கு வழங்குங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் அஜித், விஜய் ரசிகர்களும் பதாகைகள் வைத்து இடையூறு செய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்