பிரபல நடிகர் விவேக் வெளியிட்ட கண்ணீர் வரவழைக்கும் வீடியோ... உருகி போன நெட்டிசன்கள்!

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பெற்றோர்கள் மீது பிள்ளைகள் அன்பு காட்ட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் மனதை கலங்கடிக்கும் வீடியோ ஒன்றை நடிகர் விவேக் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் வெளியிட்டுள்ள வீடியோவில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் வயதான தந்தைக்கு உணவை தட்டில் வைத்து எடுத்து கொண்டு வரும் இளம் வயது மகள், தட்டை தந்தை முன்னால் இருக்கும் டேபிள் மீது வேகமாக வைத்து விட்டு உள்ளே செல்கிறார்.

இதையடுத்து மகளை பார்த்த தந்தை வயது முதிர்வால் கைகள் நடுங்கியபடி அந்த உணவை எடுத்து சாப்பிட தொடங்குகிறார்.

பின்னர் வீட்டின் இன்னொரு அறைக்கு அந்த இளம்பெண் சென்ற போது அங்கு தனது பெண் குழந்தைக்கு கணவர் சாப்பாடு ஊட்டி விடுவதை பார்க்கிறார்.

இதே போல தானே, தானும் குழந்தையாக இருக்கும் போது தனது தந்தை தனக்கு சாப்பாடு ஊட்டினார் என்பதை நினைத்து பார்க்கும் மகள் தனது தவறை உணர்ந்து தட்டில் உணவை எடுத்து கொண்டு தந்தைக்கு ஊட்ட செல்கிறார்.

பின்னர் தந்தைக்கு உணவை ஊட்ட ஸ்பூனில் எடுக்கும் முன்னர் அவருக்கு தந்தை உணவை ஊட்டுகிறார். இதையடுத்து தந்தையின் பாசத்தை உணர்ந்து மகள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுப்பது போல வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவை விவேக் பதிவிட்டதுடன், பெற்றோரை நீங்கள் மதிக்க தேவையில்லை, அதற்கு பதிலாக அவர்களை நேசியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகியுள்ளதோடு பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்