தனது திருமணம் குறித்த தகவலை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தன்னுடைய திருமணம் திருப்பதியில் தான் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கார்கில் போரில் பங்கேற்ற Gunjan Saxena என்ற பெண்ணின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படம் தொடர்பான poster ஒன்றை அவரது தந்தை போனி கபூர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பிரபல இதழ் ஒன்றுக்கு ஜான்வி கபூர் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘எனது திருமணம் நிச்சயமாக பாரம்பரிய முறைப்படி திருப்பதியில் தான் நடக்கும். காஞ்சிவரம் ஜரி புடவை தான் அணிவேன்’ என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தனக்கு பிடித்த தென்னிந்திய உணவு வகைகள் இட்லி, சாம்பார், தயிர் சாதம் என தெரிவித்தார்.

இதற்கிடையில், மாத இதழ் ஒன்றுக்கு அவர் அரைகுறை ஆடையுடன் கொடுத்த pose தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்