சோகத்திலிருந்து மீண்டு வந்த நடிகை தேவயானி குடும்பத்துக்கு மீண்டும் வந்த இடி! தாய் மரணம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகை தேவயானியின் தாய் லட்சுமி ஜெயதேவ் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தேவயானி.

இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தேவயானியின் சகோதரர் நகுலும் தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக உள்ளார்.

இந்நிலையில் நடிகை தேவயானியின் தாயார் லட்சுமி ஜெயதேவ் நேற்று மரணமடைந்துள்ளார். அவரது மரணம் தேவயானி குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லட்சுமி நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்டவர். கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ஜெயதேவை திருமணம் செய்து கொண்ட லட்சுமிக்கு தேவயானி, நகுல், மையூர் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.

சென்னையில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்து லட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தான் அவர் மரணமடைந்துள்ளார். கடந்த ஆண்டு தேவயானியின் தந்தை வயதுமூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

இந்த சோகத்திலிருந்து குடும்பத்தார் மெல்ல மீண்டு வந்த நிலையில் மீண்டும் இப்படியொரு மரணம் நிகழ்ந்தது அவர்களை உலுக்கியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers