ஈழத்தமிழர்கள் விடுதலைக்காக தான் அந்த பாடலை உருவாக்கினோம்! முதல் முறையாக ரகசியம் உடைத்த தமிழ் இயக்குநர்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஈழ விடுதலை போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தத்துவ பாடலை உருவாக்கியதாக தமிழ்பட இயக்குநர் அரவிந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஊமை விழிகள், உழவன் மகன், தாய் நாடு, கருப்பு நிலா போன்ற படங்களை இயக்கியவர் ஆர்.அரவிந்த்ராஜ். திரைப்பட கல்லூரி மாணவரான இவர், கடந்த 1986ஆம் ஆண்டு ‘ஊமை விழிகள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலர் இப்படத்தில் பணியாற்றி இருந்தனர். இந்த படத்தில் ‘தோல்வி நிலையென நினைத்தால்..’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. தோல்வியைக் கண்டு துவண்டவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இப்பாடலின் வரிகள் அமைந்திருக்கும்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஊமை விழிகள் படத்தின் இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ், இந்த பாடல் உருவானதற்கான காரணம் குறித்த ரகசியத்தை உடைத்தார். படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த அன்றைய கால கட்டத்தில், இலங்கையில் ஈழ விடுதலைக்கான போராட்டம் நடைபெற்று வந்தது.

எனவே, ஈழ விடுதலை மிக முக்கியமான பிரச்சனையாக இருந்ததாகவும், அவர்களுக்கு உத்வேகம் தரும் வகையில் பாடல் ஒன்றை அமைக்க வேண்டும் என்று உருவானது தான் ‘தோல்வி நிலையென நிலைத்தால்..’ பாடல் என்றும் இயக்குநர் முதல் முறையாக தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பல நாட்களுக்கு பின்னர் தான் எங்களுக்கு தெரியும், ஈழத்தமிழர்கள் அந்த பாடலை தங்களுடைய தேசிய கீதம் போல இன்றுவரை பாவித்து வருகின்றனர் என்று. இன்று கூட லண்டன், கனடாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அந்த பாடல் இடம்பெறுவதை நீங்கள் காணலாம்’ என தெரிவித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்