நடிகர் ராஜசேகருக்கு இருந்த ஒரே ஆசை இறுதிவரை நிறைவேறவில்லை... கண்ணீருடன் பேசிய அவர் மனைவி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகரும், இயக்குனருமான ராஜசேகர் உயிரிழந்த நிலையில் அவர் குறித்த நினைவலைகளை மனைவி உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாலைவன சோலை, மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்ல பேசு போன்ற பல திரைப்படங்களை ராபர்ட்டுடன் சேர்ந்து இயக்கிய ராஜசேகர் இன்று மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவர் ஏராளமான திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ராஜசேகர் மனசுக்குள் மத்தாப்பு படத்தை இயக்கிய போது நடிகை சரண்யாவை மணந்தார்.

பின்னர் இருவரும் பிரிந்த நிலையில் இரண்டாவதாக தாரா என்பவரை திருமணம் செய்தார்.

கணவர் குறித்து தாரா கூறுகையில், மூச்சுத் திணறல் பிரச்சனையால் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம்.

மருத்துவமனையில பணம் கட்ட முடியவில்லை என்பதால் இரண்டு நாள் சிகிச்சையளிக்கப்படவில்லை.

இறுதியில் சீரியல் இயக்குநர் விக்ரமாதித்யன் வந்து பணம் கட்டிய பிறகே சிகிச்சையளித்தார்கள். என்ன தான் சினிமாவில் இருந்தாலும் என் கணவர் சம்பாதிக்கவில்லை.

நாங்கள் வாடகை வீட்டில் தான் இருந்தோம். சமீபத்தில் தான் சிறியதாக ஒரு அடுக்குமாடி வீட்டை வாங்கினார்.

அதில் கிரஹப்பிரவேசம் செய்த நிலையில் இன்னும் குடியேறவில்லை.

இறப்பதற்குள் சொந்த வீட்டில் ஒரு நாளாவது வசிக்க வேண்டும் என்பதே அவரின் ஒரே ஆசையாக இருந்தது. ஆனால் அது இறுதிவரை நிறைவேறவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்