பிரபல தமிழ்ப்பட நடிகர் ராஜசேகர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகரும், இயக்குனருமான ராஜசேகர் உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழில் புதிய சரித்தரம், பாலைவன சோலை, சின்னப்பூவே மெல்ல பேசு போன்ற படங்களை ராபர்ட் - ராஜசேகர் என்ற இரட்டையர்கள் இயக்கினார்கள்.

இதில் ராஜசேகர் இயக்குனராக மட்டுமின்றி பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். நிழல்கள், தமிழன், நரசிம்மா போன்ற திரைப்படங்கள் அதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்

இதோடு சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.

சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜசேகர் சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று காலை உயிரிழந்தார்.

அவரின் இறப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்